உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு: நிதி அமைச்சர் ஆய்வு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 29 July 2023

உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு: நிதி அமைச்சர் ஆய்வு.


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விண்ணப்பங்கள் பெறப்படும் முகாம்களை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்,  வட்டாட்சியர் சுப்பிர மணியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், திமுக  ஒன்றிய கழகச் செயலாளர்கள் கண்ணன், செல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மாவட்டங்கள் தோறும் பெண்களுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் பல இடங்களில் பதியப்பட்டு வருகிறது. இந்த இடங்களை, அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். அரசானது, இத் திட்டத்தில் பயன் அடைய யார் தகுதியுடையவர்கள் என்பதை விளம்பரப்படுத்தினால், முகாம்களில் பெண்கள் வந்து காத்திருப்பதை தவிர்க்கலாம் என, சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். மதுரை அருகே சோழவந்தான் பகுதியில், சில இடங்களில் பெண்கள், பதிவு செய்ய அலைய நேரிடுவதாக, சிலர் புலம்புவதை காண முடிந்தது. 

No comments:

Post a Comment

Post Top Ad