காரியாபட்டி அருகே முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 September 2023

காரியாபட்டி அருகே முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் பிறந்தநாள் விழா.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் முன்னாள் தி.மு.க அமைச்சர் தங்கப்பாண்டியன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் தங்கப்   பாண்டியன், துணைத் தலைவர்கள் செல்வராஜ், கல்யாணி, மாவட்ட பிரதிநிதி சங்கர   பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கப்பாண்டியன்   நினைவி டத்தில் தி.முகவினர் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு, நலிவுற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு துணைத்  தலைவர் இராஜேந்திரன் , மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் உமாராணி, செல்வி, சரஸ்வதி, தொண்டர் அணி அமைப்பாளர் பாண்டீஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad