விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் குடியிருந்து வருகின்றனர். திருநங்கைகள் பல ஆண்டுகளாக குடியிருப்பு கேட்டு தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், திருநங்கைகளுக்கு குடியிருப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால், இன்று காலை 11 மணி அளவில் திருநங்கைகள் அனைவரும் காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் செய்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும், காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் போராட்டம் செய்த திருநங்கைகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் ஒரு வார காலத்துக்குள் வீட்டுமனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர், அதன் பேரில், திருநங்கைகள் தங்கள் போராட்டத்தை கலைத்தனர்.இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
No comments:
Post a Comment