திருத்தங்கல்லில், தேவர் ஜெயந்தி விழா, திமுக கட்சியினர், தேவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 30 October 2023

திருத்தங்கல்லில், தேவர் ஜெயந்தி விழா, திமுக கட்சியினர், தேவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை.


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில் இன்று, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்த நாள் விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மாநகர திமுக கட்சி சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

திருத்தங்கல்லில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் முழு உருவச்சிலைக்கு, சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன், முன்னாள் திருத்தங்கல் நகர்மன்ற துணைத் தலைவர் பொன்சக்திவேல் தலைமையில், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளைச் சேர்ந்த திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad