விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே, மதுரை சாலையில் மேலபட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் பின்புறம் பாரதி நகர் பகுதி சேர்ந்த ஸ்ரீராம் என்போருக்கு சொந்தமான ஸ்ரீராமலிங்க (நூர்பாலை) மில் செயல்பட்டு வருகிறது.
இன்று காலை வழக்கம் போல் 50க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள், பணியாற்றி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது தீ விபத்தில் உள்ளே இருந்த பணியாளர்கள் தப்பித்து சென்றனர். அதனால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக, ராஜபாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ராஜபாளையத்தில் உள்ள இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன மேலும் தீ அதிக அளவில் பரவி வருவதால் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்கள் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
மேலும், காவல் துறையினர் அந்தப் பகுதியில் யாரும் வராத அளவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment