காரியாபட்டி கே.கரிசல் குளத்தில் 30 ஆண்டுகள் பழமையான குடிநீர் தொட்டி இடிப்பு: பேரூராட்சி தலைவர் அதிரடி நடவடிக்கை. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 22 November 2023

காரியாபட்டி கே.கரிசல் குளத்தில் 30 ஆண்டுகள் பழமையான குடிநீர் தொட்டி இடிப்பு: பேரூராட்சி தலைவர் அதிரடி நடவடிக்கை.


காரியாபட்டி கரிசல்குளத்தில், இடியும் நிலையில் கிடந்த குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது.  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட கே. கரிசல்குளம் கிராமத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடியும் நிலையில் இருந்தது.       


இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகில் அங்கன்வாடி மைய பள்ளி, ரேசன்கடை, சமுதாய கூடம் , கலையரங்கம் போன்ற கட்டிடங்கள் இருப்பதால்.  எந்த நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருப்பதாலும் குடிநீர் தொட்டியால  எந்த நேரத்தில் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தால் பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன் வாடிக்கு அனுப்ப மறுத்து வந்தனர்.


இந்த மேல்நிலை தொட்டியை இடிக்க வேண்டும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து, கரிசல்குளம் கிராம மக்கள் தொட்டியை இடிக்க கோரி காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே. செந்திலிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகு பேரூராட்சித் தலைவர்.  ஆர்.கே. செந்தில்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து தொட்டியை இடிக்க நடவடிக்கை எடுத்தார்.

 
20 ஆண்டுகளாக  கரிசல்குளம்  கிராம மக்களின் கோரிக்கையை  உடனடியாக  நிறைவேற்றி கொடுத்த பேரூராட்சி தலைவர் செந்திலுக்கு  பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad