அதன்படி, காரியாபட்டியில் முதற்கட்டமாக கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியினை பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார். மேலும், இது குறித்து பேரூராட்சித்தலைவர் செந்தில் கூறியதாவது: மழை காலமாக இருப்பதால், அனைத்து வார்டுகளிலும் நோய் தடுப்பு நடவடிக்கை களை தீவிர மேற்கொண்டு வருகிறோம்.
பேருராட்சி சுகாதார பணியாளர்கள விடுவீடாக சென்று ,டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க விடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் மருந்து தெளித்து வருகின்றனர், வீட்டில் தண்ணீர் தேங்கி கிடக்கும் பயன்படாத பொருட்களை அகற்றப்பட்டு வருகிறது. தற்போது, கொசு மருந்து அடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து வார்டுகளிலும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படும்.
காரியாபட்டி நகரில் காலிமனைகளில் முட்செடிகள் அடர்ந்து காணப்படுகிறது சம்பந்தப்பட்ட நிலங்களில் உள்ள முட்செடிகளை உடனடியாக அகற்ற அறிவுறு த்தப்பட்டுள்ளது, பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், மேல்நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்யப்படும். மேலும், பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் நோய் தடுப்பு பணிகள் தீவரமாக செய்யப்படும் என்று தலைவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment