காரியாபட்டியில் நீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து .செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திமுக சார்பாக நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
50 நாள்களில் 50 லட்சம் கையெழுத்து இயக்கத்தை திமுக.. மாணவர் மற்றும் இளைஞர் அணியினர் திவிரமா பணியாற்றி வருகின்றனர் விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் நிதி அமைச்சசருமான தங்கம் தென்னரசுவின் ஆலோசனையின் பேரில் திருச்சுழி தொகுதி காரியாபட்டியில் நீட் விலக்கு - நம் இலக்கு என்ன கையெழுத்து இயக்கம். நடைபெற்றது.
காரியாபட்டி நகர திமுக செயலாளரும் பேரூராட்சி தலைவருமான செந்தில் தலைமையிலும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அரசகுளம் சேகர், ஆவியூர் சிதம்பர பாரதி ஆகியோர் முன்னிலை யில் வீடு வீடாக சென்று மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சங்கரேஸ்வர், துணை அமைப்பாளர்கள் ரங்கராஜன் ஸ்ரீகாந்த் கவுன்சிலர் சரஸ்வதி பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment