மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பேச்சியம்மாள் தலைமை வகித்தார். வட்டார மேலாளர் சோணைமுத்து முன்னிலை வகித்தார். காரியாபட்டி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துமாரி குத்துவிளக்கேற்றி, உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில், 100 க்கு மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் பங்கேற்று தாங்கள் தயாரித்த ஊட்டச்சத்து உணவு மாதிரிகளுடன் போட்டியில் கலந்து கொண்டனர். இதில், தோணுகால் மல்லிகை மகளிர் குழு முதல் பரிசையும் வலையங்குளம் மல்லிகை உழவர் குழு இரண்டாவது பரிசையும், தோப்பூர் தர்மாபுரம் மகளிர் குழு மூன்றாம் பரிசை பெற்றனர். சிறந்த ஊட்டச்சத்து உறைகளை தயாரித்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒன்றியக்குழு தலைவர் முத்துமாரி பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், காரியாபட்டி தேசிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தமிழ் செல்வி, ஜெயா, உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment