சிவகாசியில், வானத்தை வளைத்த 'வானவில்', பார்த்து, ரசித்து, படம் எடுத்து மகிழ்ந்த மக்கள். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 25 November 2023

சிவகாசியில், வானத்தை வளைத்த 'வானவில்', பார்த்து, ரசித்து, படம் எடுத்து மகிழ்ந்த மக்கள்.


'வானவில்'லை பார்ப்பதற்காக, மழைக் காலத்தில் காத்திருக்க வேண்டும். மழைக் காலத்தின் எல்லா நாட்களிலும் வானவில்லை பார்க்க முடியாது. வானவில் என்பது வானில் தெரியும் அற்புத அதிசயமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி  மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை நேரங்களில், வழக்கம் போல வெயில் குறைவில்லாமல் இருந்தது. பிற்பகலில் அவ்வப்போது குளிர்ந்த காற்றுடன் தூறல் மழை பெய்தது. மாலை நேரத்தில் மேகங்கள் திரண்டு வந்த நிலையில், லேசான தூறல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது வானத்தில் லேசான வண்ணங்களில், மெலிதான வடிவில் வானவில் தோன்றியது. 


இரண்டு, மூன்று நிமிடங்களில் அடர்த்தியான ஏழு வண்ணங்களுடன் பளிச்சென்று வானவில் தெரிந்தது. சிவகாசி பேருந்து நிலையப் பகுதி, விளாம்பட்டி சாலை, மீனம்பட்டி சாலை, திருத்தங்கல் சாலை பகுதிகளில், வானவில் மிக நன்றாக காணப்பட்டது. சுமார் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தெரிந்த வானவில்லை, அந்தப் பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். ஆர்வமிக்க சிலர் தங்களது செல்போன்களில், 'வானவில்'லை படம் பிடித்து, தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad