வணிக வளாக கடைகள்: நிதி அமைச்சர் ஆய்வு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 6 November 2023

வணிக வளாக கடைகள்: நிதி அமைச்சர் ஆய்வு.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கடைகளை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக, கலைஞர் நகர்புற அபிவிருத்தி திட்டத்திற்கு 1கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்க பணிகளும், வணிக வளாக கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அப்போது, பணிகளை விரைவாக முடிக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேருந்து நிலையத்தில் அமைத்து கொடுக்க அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவர் செந்தில் ,உதவி இயக்குனர் எஸ். சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், பொறியாளர் கணேசன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஒன்றியச் செயலாளர் கண்ணன், செல்லம், மாவட்டக் கவுன்சிலர் தங்கத்தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad