விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, பிரபலமான ஹாலிவுட் படங்களின் பெயர்களுடனும், பாலிவுட் படங்களின் பெயர்களுடனும் நவீனரக வானவெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சிறிய ரக வானவெடிகள் சுமார் 30 அடி உயரம் வரை பாய்ந்து சென்று வண்ணமயமாக வெடித்துச் சிதறும். பெரியளவிலான வானவெடிகள் 200 அடி முதல், 300அடி உயரத்திற்குச் பறந்து சென்று வானில் வெடித்து வர்ணஜாலம் காட்டுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மேலும் வானவெடிகளில் சிங்கிள் ஷாட், டபுள் ஷாட், விசிலிங் ஷாட், கிராக்களிங் ஷாட் என நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் வானவெடிகள் தயாராகியுள்ளன.
சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில், புதிய வரவுகளான நவீனரக வெடிகளை பட்டாசு பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment