காரியாபட்டியில் அரசு அலுவலக செயல்பாடுகள் அரசு பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 16 November 2023

காரியாபட்டியில் அரசு அலுவலக செயல்பாடுகள் அரசு பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர்.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அரசு அலுவலகங்களை பார்வையிட்டனர். பள்ளி மாணவர்களுக்கு வெளி உலக செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக அறிவோம் - ஆராய்வோம் என்ற திட்டத்தின் படி, காரியாபட்டி அருகே கழுவனச்சேரி பள்ளி மாணவர்கள் காரியாபட்டி பத்திரபதிவு , காவல் நிலையம்,  பேரூராட்சி அலுவலகம் மற்றும் யூனியன் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு வருகை தந்து இங்குள்ள அலுவலக செயல் பாடுகளை கேட்டறிந்தனர். 

மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 100 நாள் வேலை திட்டம் பயனாளிகள் பதிவேடு, சம்பளம் விபரம் குறித்து கேட்டறிந்தார்கள். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் முனியாண்டி, சுனிதா குமாரி, இளநிலை உதவியாளர் வீரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.     

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அமலா உயர்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா நடைபெற்றது.


நிகழ்ச்சியில், குழந்தைகள் தின விழா விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளியை தலைமை ஆசிரியர்கள் சகோதரி மெர்சி கரோலின், தாளாளர் மார்க்கெட் மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad