1ந் தேதி இரவு கொடி ஏற்று நிகழ்ச்சி நடைபெற்றது. அமலா உயர்நிலைப் பள்ளியிலிருந்து பவனியாக கொண்டு வரப்பட்ட கொடியை காரியாபட்டி அமல அன்னை பங்குதந்தை ஜோசப். அமலன் முன்னிலையில், மதுரை உயர்மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜெரோம் ஏரோணிமுஸ் ஏற்றிவைத்து திருப்பலியை தொடங்கி வைத்தார். 2 ந்தேதி மதுரை பிரிட்டோ பள்ளிகளின் பங்குதந்தைகள் குரூஸ் தினகரன், மரிய அருள்செல்வம், 4 ந் தேதி திருச்சி ரோசாரியன் தியான இல்ல பங்குதந்தை ஜோசப், 5 ந் தேதி மதுரை கருமாத்தூர் தூய ஆவியார் சபை பங்குதந்தை கொன்னடி, 6 ந் தேதி புதை அகஸ்தினார். சபை தியானக்குழு இயக்குநர் சந்தியாகு, ஆகியோர் கலந்துகொண்டு திருப்பலி பூஜைகள் நடத்துவார்கள்.
7ந் தேதி அமல அன்னை தேர்ப்பவனி விருதுநகர் வட்டார அதிபர், அருள் ராயன் தலைமை யில் நடைபெறுகிறது. தொடர்ந்து, 9 நாட்கள் நடைபெறும் விழாவில், மிட்பு பாதையின் முன்னோடி மனுகுலத்தின் தாய், திருக்குடும்ப அரசி, பாவிகளுக்கு வழிகாட்டி வரலாற்றில் வாழும் தாய், போன்ற தலைப்புகளில் மறையுரை நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியில், புனித வளனார் ஆலயம், ஆர்.சி. பள்ளிகள், செயின்ட் மேரீஸ். பள்ளி, சுரபி, நிறுவனம அமலா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பங்குமக்கள் பங்கேற் கின்றனர்.
No comments:
Post a Comment