விருதுநகர் அருகே குலதெய்வக் கோவிலில், முன்னாள் அமைச்சர் சிறப்பு வழிபாடு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 13 December 2023

விருதுநகர் அருகே குலதெய்வக் கோவிலில், முன்னாள் அமைச்சர் சிறப்பு வழிபாடு.


விருதுநகர் அருகேயுள்ள மூளிப்பட்டி பகுதியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீதவசிலிங்கசுவாமி கோவில் உள்ளது. அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வக் கோவிலான இதில், அமாவாசை தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீதவசிலிங்கசுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் முன்னாள் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு முன்னாள் அமைச்சர் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பலராம், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டியன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad