திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ராப்பத்து உற்சவம் நிறைவு, வரும் 8ம் தேதி முதல், எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 January 2024

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ராப்பத்து உற்சவம் நிறைவு, வரும் 8ம் தேதி முதல், எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்.


விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சியான ராப்பத்து திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்மாழ்வார் மோட்சமும், அதனை தொடர்ந்து ராப்பத்து சாத்துமுறையும் சிறப்பாக நடைபெற்றது. 

ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீஆண்டாள் கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான எண்ணெய் காப்பு உற்சவம் நிகழ்ச்சி, வரும் 8ம் தேதி (திங்கள் கிழமை) தொடங்கி, 15ம் தேதி வரை நடைபெறுகிறது. 


நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராாமராஜா தலைமையில் அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad