காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் இ.சேவை மையம் கலெக்டர் ஆய்வு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 January 2024

காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் இ.சேவை மையம் கலெக்டர் ஆய்வு.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில், இ.சேவை மைய பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பேராசிரியர் ஜெயசிலன், காரியாபட்டி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, காரியாபட்டி  தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை சம்பந்தப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதன் பிறகு, தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் இ.சேவை மையம், ஆதார் சேவை மையங் களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வரலொட்டி, வலுக்கலொட்டி, கல்குறிச்சி, கழுவனச்சேரி ஆகிய கிராமங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடை பெறும திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


வலுக்கலொட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்று பதிவேடுகள், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். கல்குறிச்சியில்,  15-வது மானியக்குழு நிதியின் கீழ் ரூ.3.60 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் சீரமைப்பு பணிகள், ரூ.3.64 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, தோப்பூர் ஊராட்சி, கழுவனச்சேரி கிராமத்தில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.64.10 இலட்சம் மதிப்பில் சாலை, 15-வது மானியக்குழு நிதியின் கீழ் ரூ.4 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் புனரமைப்பு, பணிகளை அவர், பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.


ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ்,  வட்டாட்சியர் சுப்பிரமணியம், நலிந்தோர் திட்ட தாசில்தார் அய்யாவு குட்டி, வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி, புவன னேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad