காரியாபட்டி அருகே அரசு பள்ளியில் காய்கறி தோட்டம் : அசத்தும் மாணவர்கள். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 31 January 2024

காரியாபட்டி அருகே அரசு பள்ளியில் காய்கறி தோட்டம் : அசத்தும் மாணவர்கள்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டி ஊராட்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அரசு பள்ளியில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப் புக்காக வளாகத்தை சுற்றி ஏராளமான மரங்கள் வைத்துள்ளனர். ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தின விழாக்க ளில் மாணவர்களிடம் மரக்கன்றுகள் வழங்கப் பட்டு அவர்களாகவே, முன் வந்து மரங்களை  வளர்த்து வருகின்றனர். மேலும்,  மூலிகைகளின் மருத்துவ குணங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாதிரி  மூலிகை தோட்டம் அமைக்கப் பட்டுள்ளது. 

நான் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் காய் கறிகள், கீரை வகைகளை வளர்ப்பதற்காக காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது  இங்கு விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை பள்ளியில் இயங்கும் சத்துணவு மையத்துக்கு வழங்கப் பட்டு வருகிறது.   


மாணவர்களின் இந்த புது முயற்சிக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். இது போல் பணிகளை அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த மாநில கல்வி நிர்வாகம் ஆர்வம் காட்ட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad