காரியாபட்டி கரிசல்குளம் சாலை பராமரிப்பு 1.52 கோடி மதிப்பிட்டில புதிய சாலை: அமைச்சர தங்கம் தென்னரசுவுக்கு நன்றி தீர்மானம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 31 January 2024

காரியாபட்டி கரிசல்குளம் சாலை பராமரிப்பு 1.52 கோடி மதிப்பிட்டில புதிய சாலை: அமைச்சர தங்கம் தென்னரசுவுக்கு நன்றி தீர்மானம்.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சிக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் ஆர்.கே. செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அன்பழகன முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில், பேரூராட்சி அனைத்து வார்டுகளிலும், குடிநீர், வசதி, தெருமின் விளக்கு பணிகள் குறித்து விவாதிக்கப் பட்டது. கூட்டத்தில், தலைவர் செந்தில் கூறியதாவது: காரியாபட்டி பேரூராட்சி, கரிசல்குளம் கிராமத்துக்கு செல்லும் சாலையை பராமரிப்பு செய்ய ரூ.1 கோடியே  52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு அதற்கான நிர்வாக அனுமதி வழங்கப் பட்டுள்ளது. விரைவில் சாலை பராமரிப்பு பணிகள் துவங்கப்படும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று சாலை பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பேரூராட்சிக் கூட்டத்தில், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad