மல்லாங்கிணறு பேரூராட்சியில் தீண்டாமையை ஒழிப்பு உறுதி மொழி தலைவர் துளசிதாஸ் முன்னுலையில் எடுக்கப்பட்டது. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 31 January 2024

மல்லாங்கிணறு பேரூராட்சியில் தீண்டாமையை ஒழிப்பு உறுதி மொழி தலைவர் துளசிதாஸ் முன்னுலையில் எடுக்கப்பட்டது.


விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மிக்கேல் அம்மாள்,  செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில், இந்திய அரசியலமைப்பின்பால், இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக்குடி மகனாகிய ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று, இதனால் உளமார உறுதியளிக்கிறேன். சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். 


இந்திய அரசியலமைப்பினால் எனக்குள்ள முழுப்பற்றிக்கு இது என்றென்றும் விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன். என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.. பேரூராட்சி கவுன்சிலர்கள் கருப்பையா, உதய செல்வி, செல்லம்மாள், அழகுராஜ், அனிதா, பாலச்சந்திரன், புகழேந்திரன், ராஜேஸ்வரி மகாலிங்கம், வைஷ்னவி , அழகு, சுமதி ஆகியோர் தூய்மை பணியாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad