காரியாபட்டி காவல் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் அரசு பள்ளியில் நடந்தது. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 2 February 2024

காரியாபட்டி காவல் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் அரசு பள்ளியில் நடந்தது.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் துறை சார்பில்,  விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.  விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில், காரியாபட்டி காவல் துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான விழிப்புனர்வு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

காரியாபட்டி கல்லுப்பட்டி ஊராட்சி  உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தலைமை ஆசிரியர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். காரியாபட்டி சப் இன்ஸ் பெக்டர் பா. அசோக் குமார் பங்கேற்று பேசினார். அப்போது, மாணவர்களிடம் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால். ஏற்படும் தீமைகள் பற்றியும், பாலியல் வன்முறை குற்றங்களை  குறித்தும், இளவயது திருமணம், தடுத்தல்., குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடுத்தல், மாணவர்களின் கல்விக்காக அரசு திட்டங்கள் குறித்து சப். இன்ஸ் பெக்டர் மாணவர்களிடம் பேசினார்.


கூட்டத்தில், சாலை விதிகளை பாதுகாப்போம்  என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது, இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad