கோட்டையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்காக போக்குவரத்து வசதிக்காக இந்த பஸ் நிறுத்தம் அதிக அளவில் பயன்பாட்டு வந்த நிலையில் தற்போது பயணிகள் நிழற்குடை அருகே காய்கறி கடை அமைந்துள்ளது, இந்த காய்கறி கடைக்கு காய்களை ஏற்றி வந்து நிழற்குடையில் வைத்து பொது மக்களுக்கு இடையூறாக இருந்து வருகின்றன மேலும் இந்த நிழல் குடை கட்டி பல வருடங்கள் ஆன நிலையில் பல இடங்களில் சேதம் அடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழுந்த நிலையில் உள்ளன.
காய்கறிகடையில் உள்ள காய்களை நிழல் கூடையில் வைத்து ஆக்கிரமிப்பு செய்வதால் பயணிகள் மற்றும் மாணவ மாணவியர் நிழற்குடைய பயன்படுத்த முடியாமல் மலையிலும் வெயிலிலும் நின்று அவதிக்கு உள்ளாகி வருகின்றன இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் அளித்தோம் நிழல் குடை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர் அண்ணாதுரை இந்நிலையில் உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயணிகள் நிழற்குடையை பல ஆயிரம் ரூபாய் செலவழித்து கட்டிய பயன்கள் நிழல் குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment