விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி. மேற்கு, கிழக்கு மேற்கு ஒன்றிய கழக அதிமுக சார்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே. சிவசாமி, மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெய பெருமாள், பொதுக் குழு உறுப்பினர். ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேருந்து நிலைய முன்பு வைக்கப் பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நகரச் செயலாளர் விஜயன், நகர துணைச் செயலாளர் வெங்கட் ராமன், ஊராட்சி மன்றத் தலைவர் ஆவியூர் ரவி, வழக்கறிஞர் அணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிர மணியம், பிரதிநிதி பழனியப்பன், தோப்பூர் ரகு, உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment