வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா; ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 April 2024

வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா; ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்.


விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 

வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூக்குழி திருவிழா இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.   பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் மாரியம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.10 நாட்களும் அம்மன் வீதி உலா,  திருமஞ்சன வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் கோவிலில் நடைபெறும்.   

பல்வேறு பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட இத்திருவிழா ஏப்ரல் 11 அன்று கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.அன்று முதல் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.   முக்கிய நிகழ்வான இன்று பூக்குழி திருவிழா துவங்கியது.   அதிகாலையில் அம்மனுக்கும் பிரத்தியங்கிரா தேவிக்கும் 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகளில் சென்று  கோவிலை அடைந்தனர்.


அங்கு அவர்களுக்கு பக்தர்களின் சார்பில்  மஞ்சள் நீராட்டு நடந்தது.அதன் பின் அக்கினி குண்டத்தில் ஒவ்வொருவராக தீமிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்நிகழ்வில் வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், சேது நாராயணபுரம், தம்பி பட்டி,, கோட்டையூர் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். கோவில் நிர்வாகிகள் பக்த சபா நிர்வாகிகள் திருவிழா ஏற்பாடுகளை செய்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad