மாநில அரசின் முடிவிற்கு எதிராக மத்திய காங்கிரஸ் அரசு திணிக்காது. நீட் தேர்வில் கண்டிப்பாக விலக்கு அளிக்கப்படும். விருதுநகர் மாணிக்கம் தாகூர் MP - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 19 April 2024

மாநில அரசின் முடிவிற்கு எதிராக மத்திய காங்கிரஸ் அரசு திணிக்காது. நீட் தேர்வில் கண்டிப்பாக விலக்கு அளிக்கப்படும். விருதுநகர் மாணிக்கம் தாகூர் MP


மாநில அரசின் முடிவிற்கு எதிராக மத்திய காங்கிரஸ் அரசு திணிக்காது. நீட் தேர்வில் கண்டிப்பாக விலக்கு அளிக்கப்படும். விருதுநகர் மாணிக்கம் தாகூர் MP


விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடும் மாணிக்கம் தாகூர் தனது மனைவியுடன் திருநகர் சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்துவிட்டு செய்தியாளரை சந்தித்தார்.


சாதாரண ஒரு வாக்காளராக எனது ஜனநாயக உரிமையை செலுத்துகிறேன்.


இந்த உரிமை என்பது மிக பலமானது., இந்தியாவில் உள்ள பணக்காரனும் சாதாரணமான வாக்காளர்களுக்கும் உள்ள இடைவெளி என்பது ஒரு அடி மட்டுமே இந்த இடைவெளியை காட்டுகிற இந்த ஜனநாயக கடமையை ஆற்றுவதில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி.


இந்த தேர்தல் விலைவாசியை மையப்படுத்தியும் எதிர்காலத்தை மையப்படுத்தியுமான தேர்தல் ஆர் எஸ் எஸ் மற்றும் பெரும் பணக்காரரான அதானி மற்றும் அம்பானிக்கு இந்திய செல்வங்களை விடுவிப்பதற்கான தேர்தல் .இந்த தேர்தலில் மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள்.


இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மேகதாது அணையில் நிச்சயம் மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடகா துணை முதல்வர் டி கே சிவகுமார் திட்டவட்டம் குறித்த கேள்விக்கு.?_

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இந்தியா கூட்டணியில் நாடாளு மன்ற உறுப்பினராக தமிழ்நாட்டில் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம்.


வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு?


வெற்றி வாய்ப்பிற்கு மிகவும் பிரகாசமாக உள்ளது. 2019-ல் பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.


நீட் தேர்வு ரத்து செய்ய விடமாட்டேன் என பாஜக அண்ணாமலை பற்றிய  கேள்விக்கு?


அண்ணாமலையின் காமெடிக்கு ஒரு அளவே கிடையாது உயிர் போறது உயிர் போகாதது அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தால் தானே அந்த பேச்செல்லாம் கோவை மக்கள் அந்த தவறை செய்ய மாட்டார்கள் அரவக்குறிச்சி மக்கள் செய்த முடிவைத்தான் கோவை மக்களும் செய்வார்கள்.


நாடாளுமன்றத்திற்கு அவருக்கு வழி இருக்காது இந்தியா கூட்டணியில் டெல்லியில் ஆட்சி அமையும் இந்தியா கூட்டணியின் பிரதமர் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு நீட் விளக்கு அளிப்பார்.


மிக விரைவில் நடைபெற உள்ளது அப்போது பார்க்கலாம் அண்ணாமலை எதை விடுகிறார் எதையும் எதை  விடவில்லை என்று.


நீட் தேர்விற்கு சில மாநிலங்கள் வேண்டும் என்கிறது சில மாநிலங்கள் வேண்டாம் என்கிறது. மாநிலங்கள் முடிவே மத்திய அரசு ஏற்கும் அதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு. தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்றால் காங்கிரஸ் அதை உடனடியாக நீட் விலக்கு அளிக்கும். காங்கிரஸ் கட்சி யார் மேலையும் எந்த முடிவும் திணிக்க மாட்டோம்.


அண்ணாமலை உயிர விடுவோம் என்று கூறியது போன்று காங்கிரஸ் கட்சி யார் மீதும் எதையும் திணிக்காது. இப்படிப்பட்ட திணிப்பு என்பது காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது .


ராகுல் காந்தியை பொறுத்தவரை இது போன்ற திணிப்பு இருக்காது நீட் தேர்விற்கு மாநில அரசு முடிவு செய்யலாம் நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம் என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad