காரியாபட்டியில் மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி சார்பில் நீர்மோர் பந்தல் : அமைச்சர தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 8 May 2024

காரியாபட்டியில் மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி சார்பில் நீர்மோர் பந்தல் : அமைச்சர தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

 


காரியாபட்டியில் மாவட்ட  தி.மு.க. இளைஞர்அணி சார்பில் நீர்மோர் பந்தல்  : அமைச்சர தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் நீர் - மோர்   பந்தலை, அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் தாக்கத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து,  பொது                 மக்களுக்கு   தாகம் தீர்த்துக்  கொள்ள மாநிலம் முழுவதும்        தி.மு. க .    சார்பில் நீர்மோர் பந்தல் திறக்க முதல்வர மு.க. ஸ்டாலின் அறி  வுறுத்தியுள்ளார். அதன்படி ,  விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க  இளைஞரணி சார்பில், காரியாட்டி பாண்டியன் நகர்   முக்கு ரோட்டில் நீர் - மோர்பந்தல் திறப்பு விழா நடந்தது . மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் அரசகுளம் சேகர், சிதம்பர பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ,      நீர் - மோர் பந்தலை தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர்கள் செல்லம், கண்ணன், பேரூராட்சித் தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ் வாணன், மாவட்டப் பொருளாளர் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, ஒன்றிய துணைச் செயலாளர் குருசாமி,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பால்பாண்டி, கார்த்திக்   மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் திருநாவுக் கரசு, தகவல் தொழில்நுட்ப பிரிவு தொகுதி ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பிரபாகர்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள்ராம்பிரசாத் , முத்துக் குமார் நிர்வாகிகள்   நகர நிர்வாகிகள் சங்கரேஸ்வரன், ரெங்கராஜ் உட்பட பலர் பங்கேற் றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad