மண் திருட்டு: - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 9 May 2024

மண் திருட்டு:

 


மண் திருட்டு:

ராஜபாளையம் அருகே, சேத்தூர் பகுதியில் நான்கு யூனிட் கிராவல் மண் திருட்டு. ஓட்டுனர் தப்பி ஓட்டம். பயன்படுத்திய லாரியை  வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் சேத்தூர் போலீசார் ஓட்டுநர் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் மாரியம்மன் கோயில் அருகே மண்டல துணை வட்டாட்சியா் ஆண்டாள் தலைமையிலான வருவாய்த் துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த  லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், நான்கு யூனிட் கிராவல் மண் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகளைக் கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பி ஓடிவிட்டாா். இதையடுத்து, வருவாய்த் துறையினா் லாரியை பறிமுதல் செய்து சேத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரை மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad