காரியாபட்டியில் ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம் 1008 பால்குடங்கள் ஊர் வலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 22 July 2024

காரியாபட்டியில் ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம் 1008 பால்குடங்கள் ஊர் வலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.


விருதுநகர் மாவட்டம், காரியா பட்டியில், 16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் கோவில்  சார்பில் வருஷாபிஷேகம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, கணபதி ஹோமம், மஹா சங்கல்பம், பூர்ணாகுதி ,   அஷ்ட லெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், மற்றும் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

காலை 9 மணியளவில், காரியாபட்டி முருகன் கோவிலிருந்து மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் அக்னிசட்டி மற்றும் 1008 பால் குடங்கள் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதன்பிறகு,    அம்மனுக்கு    பாலாபிஷேகம்   நடைபெற்றது. பக்தர்களுக்கு,      அன்னதானம் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி செல்வக்கனி சுவாமி செய்திருந்தனர்.  

No comments:

Post a Comment

Post Top Ad