கணக்கணேந்தல் புத்துக்கோயிலில் ஆடி மாத பெளர்ணமி சிறப்பு வழிபாடு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 23 July 2024

கணக்கணேந்தல் புத்துக்கோயிலில் ஆடி மாத பெளர்ணமி சிறப்பு வழிபாடு.


காரியாபட்டி அருகே, புத்துக் கோவில் பெ ளர்ணமி சிறப்பு பூஜை நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, கணக்கணேந்தல் கிராமத்தில், அமைந்துள்ள புத்துக்கோயிலில் ஆடி மாத பெளர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாகம்மாள் உற்சவ சிலைக்கு பால், தயிர், திருமஞ்சனம், விபூதி, சந்தனம், மஞ்சள், இளநீர் ,தேன், திருநீர், அரிசிமாவு, பழச்சாறு, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் சிலையான நாகம்மாள், லிங்கம், அம்மன், சூலாயுதம், போன்ற சிலைகளுக்கு சிறப்பு  தீபாராதனை செய்யப்பட்டது. 


ஆடி பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர், மதுரை, தூத்துக்குடி போன்ற பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகி நாகசித்தர் லெட்சுமண சுவாமிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad