ராஜபாளையம் அருகே எல்லைப் பாதுகாப்பு படை வீரர் வெட்டி கொலை. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 July 2024

ராஜபாளையம் அருகே எல்லைப் பாதுகாப்பு படை வீரர் வெட்டி கொலை.

ராஜபாளையம் அருகே, குடும்பத் தகராறில்  எல்லை பாதுகாப்பு படை வீரர் வெட்டிக்கொலை கொலை செய்த உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர். 


விருதுநகர் மாவட்டம்,  ராஜபாளையம் அருகே, குறிச்சியார்பட்டியைச் சேர்ந்த பொன்னையா - குருவம்மாள் தம்பதியின் மகன் பொன்னுச்சாமி(36). இவரது மனைவி, அழகு முத்துச்செல்வி(30). இவர்களுக்கு, கவிமணி, கவி மித்ரன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். பொன்னுச்சாமி எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்தார்.  


பொன்னுச்சாமிக்கு அவரது தாய் குருவம்மாளின் தங்கை ராஜலட்சுமியின் குடும்பத்துடன் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், இன்று இரவு 8:30 மணியளவில் பொன்னுச்சாமிக்கும், அவரது சித்தி ராஜலட்சுமியின் கணவர் தங்கவேல், மகன்கள் ராமநாதன், முனீஸ்வரன் ஆகியோருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது தங்கவேல், ராமநாதன், முனீஸ்வரன் கட்டிப்பொன் ஆகிய 4 பேர் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், பொன்னுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தகவலறிந்து வந்த கீழராஜகுலராமன் போலீசார் பொன்னுச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து, தங்கவேல், முனீஸ்வரன், ராமநாதன் அவரது மாமனார் கட்டிப்பொன்னு ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்து, போலீஸார் விசாரணை செய்து வருகிறனர். 

No comments:

Post a Comment

Post Top Ad