அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தமுமுக அலுவலகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற உள்ள சமூக நல்லிணக்க பேரணி குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கட்சிகள் சார்பில் சமூக நல்லிணக்க பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டம் தமுமுகவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, தமுமுக, விசிக, கம்யூனிஸ்ட், திக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விருதுநகர் சட்டமன்ற தொகுதி , அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, திருச்சுழி சட்டமன்ற தொகுதி, ஆகிய மூன்று தொகுதியின் சார்பாக அருப்புக்கோட்டையில் சமூக நல்லிணக்க பேரணியை சிறப்பான முறையில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment