அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் பாதையைக் கடப்பதற்காக ரயில்வே நடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த மேம்பாலம் மூடியே காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆபத்தான வகையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றனர்.
தண்டவாளத்தை குறுக்காக கடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் ரயில் பயணிகள் பாதுகாப்பு கருதி ரயில்வே நடை மேம்பாலத்தை திறக்க வேண்டும் என ரயிலில் பயணிப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது நடை மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இது ரயில் பயணிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment