மனைவி திட்டியதால் முதியவர் தீக்குளித்து தற்கொலை. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 30 September 2022

மனைவி திட்டியதால் முதியவர் தீக்குளித்து தற்கொலை.

அருப்புக்கோட்டை மணிநகரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (65) இவருடைய மனைவி லட்சுமி (59) தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. முருகேசனுக்கு மிக அதிக குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி இரவு முருகேசன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவருடைய மனைவி லட்சுமி சத்தம் போட்டுள்ளார்.


இந்நிலையில் லட்சுமி கடைக்குச் சென்ற நேரம் பார்த்து முருகேசன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை  தனது உடலில் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் குறித்து லட்சுமி புகாரின் பேரில் டவுன் போலீசார் நேற்று (29/9/2022) வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad