அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 30 September 2022

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமாரி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் பஞ்சாயத்திற்கு நிதி வழங்குவது போல் ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் வேலை செய்ய நிதி வழங்க வேண்டும் விரிவாக்கப் பகுதிகளுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் இன்னும் ஒரு வருடமே பதவிக்காலம் உள்ளது பணிகள் வழங்க மாவட்ட ஆட்சியரையும் அமைச்சரையும் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் கஞ்சநாயக்கன்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசினார். 


அதற்கு பதில் அளித்து பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஒன்றிய கவுன்சிலர் வாழவந்தராஜ் பேசுகையில் கூர்த்திப்பாரை  பகுதியில் கல்குவாரி துவங்கப்பட்டுள்ளது அதற்கு அனுமதி உண்டா என கேள்வி எழுப்பினார். மேலும் சுக்கிலநத்தம் நகராட்சி குப்பை கிடங்கிற்கு வரும் நகராட்சி வாகனங்கள் மூடாமல் செல்வதால் குப்பைகள் சாலைகளில் சிதறுகின்றன அதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசினார். 


அதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் கல்குவாரி குறித்து விசாரிக்கப்படும் குப்பைகள் சிதறுவது குறித்து நகராட்சிக்கு தபால் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினார். ஒன்றிய கவுன்சிலர் சுப்புலட்சுமி பேசுகையில் செம்பட்டியில் வாறுகால், சாலை வசதி இல்லாத இடங்களில் பணிகள் துவங்க வேண்டும் என பேசினார். இதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் உறுப்பினரின் கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார். பல விவாதங்களுடன் கூட்டம் நிறைவடைந்தது. 

No comments:

Post a Comment

Post Top Ad