சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனியான சிறப்பு சட்டம் இயற்றக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 September 2022

சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனியான சிறப்பு சட்டம் இயற்றக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத்தலைவர் காமாட்சி நாதன் தலைமையில் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் காத்தமுத்து துவக்கி வைத்தார் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதிதமிழர் பேரவை மாநில கொள்கை பரப்பு செயலாளர் கெளதமன் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட நிதிசெயளாலர் ஆற்றல் அரசு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் ஜெயபாரத்  சி.பி.எம் ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விருதுநகர் மாவட்ட தலைவர் முத்துக்குமார் நன்றியுரையாற்றினார். இந்த போராட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பதி, பாண்டியராஜன் மற்றும் தவசி, சுப்பிரமணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad