அருப்புக்கோட்டை செளடாம்பிகா பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் நீர்நிலைகளை பாதுகாக்கும் விதமாக 2020 பனை விதைகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 பனை விதைகள் நடும் விழா இன்று துவங்கியது.
விழாவில் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் தங்கப்பாண்டியன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். தேசிய மாணவர் படையின் ஆசிரியர் கேப்டன் கணேசன் மற்றும் கல்லூரி லேப் டெக்னீசியன் சிவ சண்முகம் ஆகியோர் முன்னின்று பனை விதைகளை நட்டு விழாவினை துவக்கி வைத்தனர்.
No comments:
Post a Comment