
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் பிரபாகரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மயான வசதி, சாலை வசதி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊராட்சி மன்றத் தலைவர் அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஊராட்சி வரவு செலவு கணக்குகள் குறித்து வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் மகாத்மா காந்தியின் பாடல் பாடிய சிங்கராஜம்மாள் என்ற மூதாட்டிக்கு கிராம சபை சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஊராட்சி பள்ளி வளாகத்தில் பள்ளி குழந்தைகள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment