காரியாபட்டியில் பாரத ஸ்டேட் வங்கி கிராம சேவா திட்டம் துவக்கம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 4 October 2022

காரியாபட்டியில் பாரத ஸ்டேட் வங்கி கிராம சேவா திட்டம் துவக்கம்.

காரியாபட்டியல், பாரத ஸ்டேட் வங்கி கிராம சேவா திட்டம் துவங்கப்பட்டது.  பாரத ஸ்டேட் வங்கியும், தானம் பவுண்டேசன் சார்பாக கிராம சேவா திட்டத்தின் மூலம், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம்  தேனூர், சூரனூர், தொட்டியங்குளம், சித்தனேந்தல், மறைக்குளம் ஆகிய கிராமங்கள் தத்து எடுக்கப்பட்டுள்ளது. 


அதன்படி  கிராம சேவா திட்ட துவக்கவிழா தேனூர் அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு, பாரத ஸ்டேட் வங்கி தூத்துக்குடி மண்டல மேலாளர் முருகானந்த் தலைமை வகித்தார். சூரனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராதிகா சிவக்குமார், வேப்பங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆதி ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


வங்கி கிளை மேலாளர் சுரேஷ் வரவேற்றார், விழாவில், மாலை நேரக் கல்வி திட்டம், நாற்றங்கால் பயிர் நடும் திட்டம் ஸ்மார்ட் பள்ளி வகுப்பறை  துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பாரத ஸ்டேட் வங்கி அறக்கட்டளை நிர்வாகி தீபக்மகந்தா, தானம் பஞ்சாயத்து வளர்ச்சி அறக்கட்டளை முதன்மை நிர்வாகி சாந்திமதுரேசன் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வேப்பங்குளம், மறைக்குளம் சூரனூர் சித்து மூன்றடைப்பு   காரியாபட்டி சீகனேந்தல் சொக்கனேந்தல் கிராமங்களிலிருந்து தானம் பவுண்டேசன் உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில், ஜெயராஜ் நன்றி கூறினார்.  

No comments:

Post a Comment

Post Top Ad