அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ராமலிங்கா நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் 2,400க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுதாரர்கள் இருந்ததால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. பொதுமக்கள் நீண்டநேரம் நிற்கும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் பாளையம்பட்டி ராமலிங்கா நகர் விரிவாக்க பகுதியில் கூடுதலாக நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த நியாய விலை கடையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் எத்தனை கார்டுதாரர்களுக்கு இங்கு பொருட்கள் வழங்கப்படுகிறது, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியின் போது கூட்டுறவு துறை அதிகாரிகள் ஒன்றிய திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment