அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மாவட்ட சுகாதாரத்துறை சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அவர்கள் ஆரோக்கியம் காண பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
பெரும்பாலான பெண்கள் அயர்ன் சக்தி இல்லாமல் இருப்பது தெரியவந்தது இதனை கருத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் குறைந்தது மூன்று மாத அளவிலாவது பேரிச்சம் பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய அயர்ன் சக்தியை அதிகரிக்கும் கிட் வழங்கப்பட உள்ளது. இது மிகவும் வரவேற்க கூடிய ஒரு விசயம் என பேசினார்.
No comments:
Post a Comment