தகுதியுள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் மீண்டும் வழங்கப்படும் அமைச்சர் பேச்சு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 4 October 2022

தகுதியுள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் மீண்டும் வழங்கப்படும் அமைச்சர் பேச்சு.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வீட்டில் வளைகாப்பு நடத்த முடியாதவர்களுக்கு சகோதரனாக இருந்து முதல்வர் வளைகாப்பு நடத்துகிறார். பிரச்சினை இல்லாத வீடுகள் இல்லை பிரச்சினையை தள்ளிவிட்டு பிரசவகாலத்தில் நல்ல மனநலத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கவலை வேண்டாம். 


பெண்கள் தான்  அனைத்து போட்டிகளிலும் ஜெயிக்கிறார்கள் எந்த குழந்தையாக இருந்தாலும் அது நம்முடைய குழந்தைகள் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு எனக்கு வாக்களித்துள்ளீர்கள் உங்களை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இதுவரை முதியோர் பெண்சன் 4,92,000 பேருக்கு பெண்சன் வழங்கியுள்ளோம். முதியோர் பெண்சன் வாங்கும் நபர்களை நீக்கி இருக்கிறோம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அனைத்து ஆட்சியிலும் தகுதி இல்லாதவர்களை நீக்கம் செய்வது வழக்கமான ஒன்றுதான் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு மீண்டும் ஆய்வு செய்து தகுதியுடைய அனைவருக்கும் மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்படும். 


எல்லோருக்கும் எல்லாமும் வழங்க கூடிய ஆட்சி தான் திமுக ஆட்சி என பேசினார். 

No comments:

Post a Comment

Post Top Ad