அருப்புக்கோட்டையில் தனியார் மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஊட்டச்சத்து பொருட்களையும் வளைகாப்பு பொருட்களும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் 141 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், மின்னணு குடும்ப அட்டை, ஆதரவற்ற விதவை சான்று, சாலை விபத்து நிவாரண உதவி தொகை ரூ 20,29,660 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment