அருப்புக்கோட்டை மதுரை சாலையில் இருந்து ரயில்வே பீடர் செல்லும் சாலையில் சாலையோரம் உள்ள முட்புதரில் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இறைச்சி கழிவுகளை பிளாஸ்டிக் கழிவுகளை வீட்டுக் குப்பைகளை கொட்டுகின்றனர்.
திறந்த வெளியில் கொட்டப்படும் இந்த குப்பைகளை சில மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. அருகே பேருந்து நிறுத்தம் உள்ளதால் குப்பையில் இருந்து வரும் புகை காரணமாக பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அந்த வழியாக வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை வருவதினால் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே திறந்த வெளியில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment