விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீபேச்சியம்மன் கோவிலில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீபேச்சியம்மன், கருமாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
மேலும் சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைபண்டுக்கு சொந்தமான காய்ச்சல்கார அம்மன் கோவில், ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில், ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் நவராத்திரி சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மகமைபண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment