திருவில்லிபுத்தூர் அருகே, கல்லூரி மாணவி மாயம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 1 October 2022

திருவில்லிபுத்தூர் அருகே, கல்லூரி மாணவி மாயம்.


விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள குப்பைச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (45). இவரது மகள் ரேணுகா (23). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரிக்கு தேர்வு எழுதுவதற்காக சென்ற ரேணுகா, பின்னர் வீடு திரும்பவில்லை. 


கல்லூரிக்கு தேர்வு எழுதச்சென்ற தனது மகளை, செல்வி பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து செல்வி, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், காணாமல் போன கல்லூரி மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad