அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கோபாலபுரம் சாலையில் ரயில்வே தரைப்பாலத்தின் கீழே மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கோவிலாங்குளம், பண்ணை மூன்றடைப்பு, கட்டங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விருதுநகர் செல்வதற்காக இந்த பாதையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
சிறிய மழை பெய்தால் கூட இங்கு இடுப்பளவிற்கு மேல் மழை நீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மாற்று பாதையில் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இப்பாதையை விவசாய மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் தற்போது விளைச்சல் பருவம் என்பதால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
No comments:
Post a Comment