காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே சாலமங்கலத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து ஜாதி சான்றிதழ் கிடைக்காததால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் வேல்முருகன் மரணத்திற்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, வனவேங்கைகள் கட்சி மற்றும் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வேல்முருகன் மரணத்திற்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வேல்முருகன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
No comments:
Post a Comment