அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் சுதாகரன் (42) இந்நிலையில் சுதாகரன் நீதிமன்றம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜோதிபுரம் அருகே புறவழிச்சாலை செல்லும் சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் சுதாகரன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சுதாகரன் மற்றும் எதிரே வந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முஸ்லிம் வடக்கு தெருவை சேர்ந்த சம்சுதீன் இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சம்சுதீன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து சுதாகரன் புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்தியதாக சம்சுதீன் மீது நகர் காவல் நிலைய போலீசார் நேற்று (15-10-2022) வழக்கு பதிந்துள்ளனர்.
No comments:
Post a Comment