அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் இவர் விருதுநகரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். சுரேஷ்குமார் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது பாலவநத்தம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே வந்த இருசக்கர வாகனம் மோதி சுரேஷ்குமார் படுகாயமடைந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சுரேஷ்குமாரின் சகோதரர் சசிகுமார் அளித்த புகாரின்பேரில் தாலுகா காவல் நிலைய போலீசார் விபத்து ஏற்படுத்தியதாக பாலாஜி என்பவர் மீது நேற்று (15-10-2022) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment