அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியில் காமராஜர் சிலை பின்புறம் உச்சி மாகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் பூசாரியாக விவேகானந்தன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விவேகானந்தன் நேற்று இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு இன்று காலை மீண்டும் வந்து கோவிலை திறந்து பார்த்த போது உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 50,000 பணம் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்க நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நவராத்திரி காணிக்கையை குறிவைத்து இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உடன் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் கோயில் கிரில் கம்பிகளின் இடையே புகுந்து மர்ம நபர் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இதே கோவிலில் கடந்த (05-08-2022) அன்றும் இதேபோல் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment